மீராவோடையில் சாதனையாளர் கௌரவிப்பு

0
143

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி மீராவோடை மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஒன்றியத்தின் பிரதித் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைட், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச கல்வியலாளர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மீராவோடை பிரதேசத்தில் அதிபர் சேவைக்கு சித்தியடைந்தவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், கல்வி நிருவாக சேவைக்கு சித்தியடைந்தவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு செம்மண்னோடை அல் ஹம்றா வித்தியாலயம், மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம், பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம், மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலயம் ஆகியவற்றில் ஐந்தாம் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சேவையை பாராட்டி மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

01 02 03

LEAVE A REPLY