ஹாபீஸ் நசீர், முன் மாதிரியான அரசியலை செய்யவில்லை; முறன்பாடான அரசியலையே செய்துள்ளார்: எம்.எஸ்.சுபைர் தெரிவிப்பு

0
151

(விஷேட நிருபர்)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முன் மாதிரியான அரசியலை செய்யவில்லை. முறன்பாடான அரசியலையே செய்துள்ளார் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

காத்தான்குடி மீயடிh போரத்திற்கு தளர்பாடங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

11.11.2017 சனிக்கிழமை இரவு காத்தான்குடி அல் பஜ்ர் அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முன் மாதிரியான அரசியலை செய்யவில்லை. முறன்பாடான அரசியலையே செய்துள்ளார்.

அவருடைய முதலமைச்சர் பதவிக்காலத்தில் கிழக்கு மாகாண சபையை வைத்து அதிகார துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தினை மேலும் நீடிக்க முடியாது என்று தெரிந்தும் பிரதமரின் கதையை கேட்டு 20வது திருத்திற்கு வாக்களித்ததுடன் கிழக்கு மாகாண சபையையும் பிழையாக வழி நடாத்தினார்.

ஜனநாயத்துக்கு விரோதமாக இவர் செயற்பட்டதுடன் முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் இழைக்கும் வகையிலேயே இவர் நடந்து கொண்டார்.

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் கட்டிடம் பிரதமரினால் கடந்த 20.8.2017 அன்று திறந்து வைக்கப்பட்ட வைபவத்திற்கு இருபது இலட்சம் ரூபா பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணம் மக்களின் வரிப்பணமாகும். இந்தப்பணத்தினை செலவு செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த ஹாபீஸ் நசீர் அகமட் அவர்களே அதற்கான அனுமதியினை வழங்கி மக்களின் வரிப்பணத்திணை துஷ்பிரயோகம் செய்வதற்கு காரணமாக இருந்துள்ளார்.

காத்தான்குடி நகர சபை கட்டிடத்திறப்பு விழாவிற்கு காலை உணவு மற்றும் சிற்றுண்டி செலவாக 135750 ரூபாவும், பதாதை மற்றும் வரவேற்பு தோரணம் என்பவற்றிற்காக 59500 ரூபாவும், கூடாரம் மற்றும் கம்பி போன்றவற்றிற்கான வாடகை செலவாக 127000 ரூபாவும், அலுவலக வரவேற்பு பலகைக்காக 88000 ரூபாவும், அலுவலக திறப்ப விழா சிற்றுண்டி மற்றும் மூன்று நான் ஊழியர்களின் சாப்பாடு தேணீர் போன்றவற்றிற்கான செலவாக 125000 ரூபாவும் பிரதமர் மற்றும் அமைச்சர்களை வரவேற்பதற்காக போடப்பட்ட காபட் செலவாக 81000 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று ஏறாவூர் நகர சபை கட்டிட திறப்பு விழாவிற்காக அழைப்பு மற்றும் பெனர் போன்றவற்றிற்காக 345000 ரூபாவும், மேடை மற்றும் ஒலி பெருக்கி போன்றவற்றிற்காக 378800 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று ஆரையம்பதியில் சுற்றுலா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட வைபவத்தின் செலவாக 324563 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

இது மக்களுடைய வரிப்பணமாகும். இந்தப்பணம் முன்னாள் முதலமைச்சரின் பணிப்பின் பேரிலேயே வீண் விரயம் செய்யப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லலாம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வைத்துள்ள வழக்கு வெல்லுமாயின் உடனடியாக மாகாகண சபை தேர்தல் நடைபெறும்

ஆனால் குறுகிய காலத்தில் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் மற்றும் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் பொருளாளர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் மற்றும் உப தலைவர் எம்.எச்.எம்.அன்வர் உள்ளிட்ட உறுப்பினர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

DSC01613 DSC01614

LEAVE A REPLY