மட்டக்களப்பில் பாழடைந்த வீட்டில் காணப்பட்ட யுவதியொருவரும் ஏழு இளைஞர்களும் கைது: யுவதியை மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை

0
1387

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பில் பாழடைந்த வீட்டில் இருந்த யுவதி ஒருவரையும் சில இளைஞர்களையும் மட்டக்களப்பு பொலிசார் இன்று (13) திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பாரதி லேனிலுள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வீட்டுக்கு சென்று வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் அங்கு மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதான யுவதியொருவருடன் ஏழு இளைஞர்கள் இதன் போது காணப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

குறித்த யுவதி அங்கு அவர் காதலிக்கும் காதலனை சந்திப்பதற்காக வருகை தந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த யுவதியை விசாரணை செய்த மட்டக்களப்பு பொலிசார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

DSC09430

LEAVE A REPLY