பெற்றோல் தட்டுப்பாட்டின் பின்னணியிலுள்ள சூத்திரதாரியை வெளிப்படுத்தவும் ; கம்மன்பில

0
123

நாட்டில் கடந்த சில தினங்களில் பெற்றோல் பற்றாக்குறை பாரிய ஒரு பிரச்சினையாக காணப்பட்டது இப்பிரச்சினை பாரிய ஒரு சதிதிட்டம் என்று பலர் பலவிதமாக கூறுகின்றனர் இந்த விடயத்துடன் தொடர்புடையவர்களை நாட்டிற்கு தெரியப்படுத்துவது அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் கடமை எனறு பாராளுமன்ற உறுப்பிணர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் பெற்றோல் பற்றாக்குறை பெரும் ஒரு பிரச்சினையாக காணப்பட்டது இது ஒரு சதித்திட்டம் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்புப்பட்டவர்களை உடனடியாக மக்களுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார் ஆனால் அவர் யாரென்று குறிப்பிடவில்லை.

இதுவரை 6 அமைச்சர்கள் இப்பதவியில் இருந்துள்ளனர். இவர்களில் இருவர் இவ்விடயத்துடன் தொடர்புபட்டதாகவும் அவர்களை தான் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டமை ஏற்றக்கூடிய விடயம் ஆனால் மிகுதியாக உள்ள நால்வரது நிலைமை கவனிக்கத்தக்கது இவர்களையும் இவ்விடயத்துடன் தொடர்புப் படுத்துவது முறையற்ற விடயம்

டீசல் மற்றும் பெற்றோல் மாபியாக்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவதாக அரசாங்கம் ஆட்சிக்கு வரும் பொழுது வாக்குறுதி அளித்தது ஆனால் நடைமுறையில் அந்த வாக்குறுதியும் பொய்யானதாகவே உள்ளது இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிடின் எதிர்காலத்தில் நாட்டில் பெற்றோலை மையப்படுத்தி பல பிரச்சினைகள் தோன்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY