முஸ்லிம்கள் தமது அரசியல் உரிமையை இழந்து வருகின்றார்கள்: காத்தான்குடியில் SLTJ பேச்சாளர் அப்துர் ராசீக்

0
249

(விஷேட நிருபர்)

முஸ்லிம்கள் தமது அரசியல் உரிமையை இழந்து வருகின்றார்கள் என சிரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் ஆர்.அப்துர் ராசீக் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்க கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எதனை முஸ்லிம் சமூகத்திற்காக சாதித்துள்ளார்கள் என்று பார்த்தால் எதையுமே அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக சாதிக்க வில்லை.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பல்வேறு அநியாயங்கள் நடக்கின்ற போதெல்லாம் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்கப்பட வில்லை.

பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு கபழீகரம் செய்யப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் பூர்வீக தளங்கள் பறிபோயுள்ளன. எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. வட்டாரப் பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களிள் சொந்தக்காணியில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

இத்தனை அநியாயங்களும் முஸ்லிம்களுக்கு நடந்தும் இவர்கள் இன்னும் தமது நலத்தினையே பாதுகாத்து வருகின்றார்கள்.

அமைச்சுப்ப தவிகளை இலக்காக கொண்டு மாத்திரமே இவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு தேவையெல்லாம் பட்டம் பதவிகளே தவிர வேறு சமூக உனர்வு கிடையாது.

அன்மையில் அமைச்சர் ரஊப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கல்முனை மக்களை காட்டிக் கொடுத்து உரையாற்றினார். சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்களிடையே விரிசலை உண்டு பண்ணும் சதி வேலைகளையும் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளே செய்து வருகின்றனர்.

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரச்சினையை வைத்து இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் பிழைப்பு நடாத்துவதை நாம் பார்க்கின்றோம்.

முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து பிழைப்பு நடாத்தும் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளை மக்கள் ஒரு போதும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பக் கூடாது. இவர்களை உஸ்பகிஸ்தான் என்ற நாட்டுக்கே அனுப்ப வேண்டும்.

இவர்களைப் பற்றி விமர்சித்தால் சிரீP லங்கா தௌஹீத் ஜமாஅத் அரசியலுக்கு வரப்போகின்றது என கூறகின்றார்கள். ஒரு போதும் சிரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அரசியல் செய்யாது. ஏந்த வொரு தேர்தலிலும் எமது ஜமா அத் போட்டியிடாது என்பதை நாம் தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்.

முஸ்லிம் சமூத்திற்கு அநியாயங்கள் இழைக்கப்படும் போது அவற்றுக் கெதிராக நாம் குரல் கொடுப்போம். முஸ்லிம்கள் தமது அரசியல் உரிமையை இழந்து வருகின்றார்கள்.

தற்போது முன் வைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பின் படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவான ஒரு கருத்தினையும் அதே கட்சியினை சேர்ந்த பிரதியமைச்சர் ஹரீஸ் எதிரான கருத்தினையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது கட்சிக்குள்ளேயே ஒற்றுமை கிடையாது.

ஒரு போதும் வடக்கு கிழக்கு இணையக் கூடாது என்பதே எமது சிரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கருத்தாகும். வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் கூறுகின்றோம்.

காத்தான்குடியை அன்மித்துள்ள பாலமுனை கிராமத்தில் 1200 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமம் ஒரு கிராம சேவகர் பிரிவாக இருக்கின்ற அதே நேரம் 150 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராம் ஒரு கிரமா சேவகர் பிரிவாகவும் காணப்படுகின்றது. இதனையே பிரிக்க திராணியற்ற அரசியல் வாதிகளாகத்தான் முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY