கேரளா கஞ்சாவுடன் மாமா, மருமகன் உட்பட மூவர் கைது

0
334

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை அபயபுர சந்தியில் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மாமா, மருமகன் உட்பட மூவரை இன்று (14) காலை 10.00 மணியளவில் கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.

கேரளா கஞ்சா போதைப்பொருளை வைத்திருப்பதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து இம்மூவரையும் சோதனையிட்ட போது மூவரிடமும் 02 கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, பாலையூற்று பகுதியைச்சேரந்த துமிந்த ஹேவகே ரஞ்சித் லால் (50வயது) அவரது மருமகனான ஈ.எஸ்.ஹேவா விதாரண (24வயது) மற்றும் கிராந்துரை-போகம்பிட்டிய பகுதியைச்சேர்ந்த எஸ்.எஸ்.சம்பத் குமார (25வயது) எனவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY