மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு 3300 லீற்றர் பெற்றோல் விநியோகம்

0
375

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு 3300 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு களஞ்சியசாலைக்கு கொழும்பிலிருந்து திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய தினங்களில் குறிப்பிட்டளவு பெற்றோல் வந்துள்ளது.

அதனை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 104 எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு 3300 லீற்றர் பெற்றோல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு களஞ்சியசாலையிலிருந்து மாவட்டத்திலுள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

எனினும் இன்னும் ஓரிரு ததினங்களில் இந்த நிலைமை சீரடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமையும் (8.11.2017) சில எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் இல்லை என்று எழுதப்பட்ட பதாதைகள் போடப்பட்டுள்ளதையும் சில எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பெற்றோhல் பெறுவதையும் அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பு நகரிலுள்ள சில எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களும் நீண்ட வரிசையில் நிற்பதையும் காணமுடிகின்றது.

இதே நேரம் 3300 லீற்றர் பெற்றோல் போதுமானதாக இல்லையெனவும் பொலிஸ் வாகனங்கள் மற்றும் அரச வாகனங்களுக்கும் அதிகளவு பெற்றோல் தேவைப்படுவதாகவும் எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

டீசல் போதியளவு இருப்பதாகவும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வில்லையெனவும் அவா்கள் மேலும் தெரிவித்தனர்.

01

LEAVE A REPLY