முதல் ஒருநாள் போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

0
121

இலங்கை அணி, பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட துபாய் சென்றுள்ளது. முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி 3.00 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் ஸமானும், அஹ்மத் ஷெசாத்தும் களமிறங்கினர். ஷெசாத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து பாபர் அஸாம் களமிறங்கினார். ஸமான் – அஸாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டியது. ஸமான் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்ஜெயா பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் அஸாமுடன், முகமது ஹபீஸ் ஜோடி சேர்ந்தார். ஹபீஸ், 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஷோயப் மாலிக் களமிறங்கினார். ஒரு முனையில் நிலைத்துநின்று ஆடிய அஸாம் அரைசதம் அடித்தார். மாலிக்கும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். அஸாம் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து லக்மல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் குவித்தது, இமாத் வாசிம் 10 ரன்களுடனும், ஹசன் அலி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 293 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

(Maalaimalar)

LEAVE A REPLY