மரம் வளர்ப்போம்- சூழலை பாதுகாப்போம்

0
303

(அப்துல்சலாம் யாசீம்)

மரம் வளர்ப்போம்-சூழலை பாதுகாப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் இன்று (12) பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயினால் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 60ம் ஆண்டை கொண்டாடும் முகமாகவும் தேசிய உற்பத்தி புரட்சி 2017 தேசிய வேலைத்திட்டத்தை முன்னேற்றுவதற்காகவுமே இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுவதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார -திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இதில் கலந்து கொண்ட மொறவெவ பிரதேசத்தைச்சேர்ந்த முதலியார்குளம் பிரதேச மக்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் இதர மரக்கன்றுகளும் பிரதியமைச்சரின் கையினால் வழங்கி வைக்கப்பட்டது.

DSC_0187

LEAVE A REPLY