கோழி இறைச்சி வியாபாரிகளும் வாழைச்சேனையும்

0
1096

(முஹமட் றபிக்)

வாழைச்சேனையில் கோழி இறைச்சி 1 kg ரூபாய் 340&360 என்று பெரிய கடைகளில் விற்பனை செய்து சிறிய வியாபாரிகளை கடைகளை மூட வைக்கும் வியாபாரம் நடக்கிறது

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து ஒரு மட்டமான விலையை தீர்மானம் செய்து சிறு தொழிலாளிகளை பாதுகாக்குமாறு வேண்டுகின்றோம்

பெரிய கடைகளை நடத்தும் முதலாளிகள் கோழிகளை நேரடியாக எடுத்து வந்து எமக்கு ஒரு விலைக்கு கொடுத்து விட்டு அவர்கள் அதே விலைக்கு தமது கடைகளில் விற்பனை செய்கின்றனர் இதனால் எமக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை மாறாக நஷ்ட்டம் மட்டுமே மீதீ

ரூபாய் 340&360 க்கு விற்பனை செய்து லாபம் அடைவது என்றால் 20 நாள் கோழி அல்லது கராமான முறையில் வழர்க்கப்படும் கோழியாக இருக்க வேண்டும் இந்த விலைக்கு கோழி உரித்து குடல் எடுத்து சிறிது சுத்தம் செய்து கொடுக்கலாம் ஆனால் இவர்கள் நன்றாக சுத்தம் செய்து வெட்டி கொடுக்கிரார்கள் இப்படி செய்தால் அவர்கள் எமக்கு கோழி தரும் விலைக்கு கட்டுப்டி ஆகுது இல்லை .

தொழிலில் போட்டி மட்டும் இருக்க வேண்டும் புறாமை இருக்க கூடாது முடிந்தால் எமக்கு உங்களுக்கு கட்டுப்படி ஆகும் விலையில் கோழி தாருங்கள் நாங்களும் வியாபாரம் செய்ய
தயவுசெய்து இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவும்

LEAVE A REPLY