தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிரமதானம்,

0
171

(எம்.எம்.ஜபீர்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் அமீர் அலி பொது நூலகத்தின் சுற்றுப்புர சூழல், வடிகான், சிறுவர் பூங்கா என்பவற்றை சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவர், வீ.சீ நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், மற்றும் ஊழியர்கள், வாசகர்கள், உள்ளிட்ட கலந்துகொண்டனர்

DSC01520 DSC01497 DSC01490 DSC01427.

LEAVE A REPLY