பாலமுனை அஷ்ரஃப் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டடம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

0
173

(ஹம்ஸா கலீல்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் பாலமுனை அஷ்ரஃப் வித்தியாலயத்தின் இரண்டு மாடிகளை கொண்ட வகுப்பறை கட்டடம் இன்று (12) வியாழக்கிழமை கௌரவ புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராக இருந்த கால கட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட மேற்படி கட்டடம், புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் இரண்டாம் கட்ட 11.15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முடிவுறுத்தப்பட்டு இராஜாங்க அமைச்சர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

image2

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், முன்னாள் அஷ்ரஃப் வித்தியாலயத்தின் அதிபர் அல்ஹாஜ் ஹைருல்லாஹ் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஹைருல்லாஹ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

image3 image4 (3) image6 image5 (1)

LEAVE A REPLY