போகாத புகையிரதம்

0
208

(Mohamed Nizous)

புகை வண்டி ஸ்ட்ரைக் செய்வார் சில பேர்-வீடு
போகின்ற வழி இன்றிப் பல பேர்.
எடுத்ததற்கெல்லாம் எல்லாம் ஸ்ட்ரைக்காம் -இதில்
நடுத்தர வர்க்கம் நசியும்.
ஆண்களும் பெண்களும்
அலை மோதி நிற்க
தவறை யார் செய்த போதும்
தண்டனை பொது மக்கள் மீதே.

யூனியன் என்கின்ற அமைப்பு-அது
தானாய் இயங்கிட வேண்டும்.
பெனியனுள் சனியனாய் சில பேர்-இங்கு
யூனியன் உள்ளே நுழைவார்.
அரசியல் செய்திடும் ஆட்களின் செயலால்
கரைச்சலில் வீழ்வார் மக்கள்
உரைத்தேன் உள்ளபடி கொழும்பில்.

தேர்தல் நெருங்கிடும் போது-பலர்
சேர்வார் கூதல் காய
போர் போல் ஆக்குவார் வாழ்க்கை-அதில்
பேர் வாங்கி பிரபலம் பெறுவார்.
முரண்களை தீர்த்திட
முடியாத அரசு
இருப்பது இங்லிஸ் படம் பார்க்கவா
இருப்பது இங்லிஸ் படம் பார்க்கவா

LEAVE A REPLY