பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் உள்பட இருவர் பலி

0
198

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே க்ரிஷ்னா காதி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று பிற்பகலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலம் அவர்கள் தாக்கினர்.

இந்த தாக்குதலில் இந்திய வீரர் மற்றும் அங்குள்ள உள்ளூர்வாசி ஒருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் இதுவரை 600 முறை பாகிஸ்தான் ராணுவல் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY