கிரானேட் குண்டு வீச்சு – 2 இளம்பெண்கள் படுகாயம்

0
222

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ராஜ் போரா சவுக் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தின் அருகே இன்று வந்த மர்மநபர்கள் தாங்கள் கொண்டு வந்த கிரனேட் குண்டை வீசினர். இந்த தாக்குதலில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், குண்டு வீசிய மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY