கரையோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்ட புலிச்சுறா !

0
577

(ஷாணிக்கா)

வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட மீன் வகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (11) கரை திரும்பிய படகு ஒன்றில் இருந்த 170 கிலோ கிராமிற்கு மதிக்கத்தக்க நிறையுடைய புலிச்சுறா எனும் மீன் ஒன்று இவ்வாறு கைப்பற்றப்படுள்ளதாகவும்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து இப் புலிச்சுறாவினை கைப்பற்றிய கரையோர காவற்படையினர் அதற்கான மேலதிக நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகை மீன் இனம் தடைசெய்யப்பட்ட மீன் என்பது குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று குறித்த படகில் உள்ள மீனவர்கள் பேசிக்கொண்டதாகவும் சம்பவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

குறித்த மீன் இனம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் என்பதுடன் இதனை “கடல்புலி” என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் “புலிச்சுறா” என்றும் அழைக்கப்படுகிறது.

20171012_093424_resized_2

LEAVE A REPLY