போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு

0
325

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கிண்ணியா பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (12) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளவர் கிண்ணியா-பிரதான வீதியைச்சேர்ந்த அப்துல்சலீம் அப்பாஸ் (23வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் வைத்தியரின் அனுமதியின்றியும் ஆலோசனையின்றியும் 225 மிலிலி கிரேம் டெமடோல் 30 மாத்திரைகளுடன் கேரளா கஞ்சா போதைப்பொருளையும் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பெறப்பட்ட மாத்திரைகளை தேசிய அவ்தடங்கள் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி அறிக்கையினை பெறுமாறும் அவரிடம் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவை அரச பகுப்பாய்வு திணைக்களத்திழற்கு அனுப்பி அறிக்கையினை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதான நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

LEAVE A REPLY