ஒரு ஆடும் போராளிகளும்

0
202

(Mohamed Nizous)

வட்ஸ் அப் மெஸேஜை
வாசித்துப் பார்ப்பார்.
ஆடொன்று வீதியில்
அடிபட்ட என்றிருக்கும்.

கூடுதல் சுவை சேர்க்க
குமுறும் போராளி
ஆடொன்று வீதியில்
அரைபட்ட என மாற்றி
போடுவார் குறுப்பில்

போராளி நம்பர் 2
உயிரிழந்த சோகம்
ஊர் செய்தி என மாற்றி
போராளி மூன்றுக்கு
போடுவார் அவர் பார்த்து

நெற்றில் சேர்ச் பண்ணி
பெற்ற படம் சேர்த்து
சற்று முன் பெரு விபத்து
சதியா எனக் கேட்டு
பெற்றோல் பவுஸர் எரிவதனை
பெரிதாகப் போடுவார்

அடுத்த போராளி
அரசாங்க காவல் துறை
படுத்துத் தூங்குறதா
பாதை விபத்தை தடுக்காது
என்று கேள்வி கேட்டு
இருக்கின்ற கண்டக்சால்
புதிதாக குறூப் தொடங்கி
போராடத் தொடங்குவார்.

காரசாரக் கருத்துக்கள்
கண்டபடி செயாராக
போராட்டம் செய்வதற்காய்
பொதுக்கூட்டம் போட என்று
சேர வேண்டிய இடம் சொல்லி
செய்திகளைப் பரப்புவார்.

போராளிக் குரூப்பினிலே
பொங்கிய ஆட்கள் பலர்
கூட்டத்துக்கு வராமல்
ஆட்டையைப் போடுவார்.

வந்து சேரும் போராளி
வயிறு நிறைய உண்பதற்காய்
‘#அந்தஅடிபட்ட
ஆடு அறுக்கப்பட்டு
BBQ போடப்படும்
பிரச்சினை பேசப் படும்
அத்தோடு முடிந்து போகும்
ஆடும் ஆர்ப்பாட்டமும்….!

LEAVE A REPLY