மட்டக்களப்பு மாவட்டத்தில் 2323 தற்கொலை முயற்சிகள்; 79 தற்கொலை மரணங்கள்

0
267

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 2323 தற்கொலை முயற்சிகள் இடம் பெற்றுள்ளதுடன் 79 தற்கொலைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மெலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த 2015ம் ஆண்டில் 37 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் 18வயதுக்குட்பட்ட 420 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன் இதில் 120 ஆண்களும் 280 பெண்களும் அடங்குகின்றனர்.

இந்த ஆண்டில் 18வயது தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட 630 பேர் தற்கொலைக்க முயற்சித்துள்ளதுடன் இதில் 200 ஆண்களும், 430 பெண்களும் அடங்குகின்றனர்.

50 வயதுக்கு மேற்பட்டோரில் 250 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன் இதில் 90 ஆண்களும் 160 பெண்களும் அடங்குகின்றனர்.

அதே போன்று 2016ம் ஆண்டில் 42பேர் தற்கொலை செய்துள்ளதுடன் 18வயதுக்குட்பட்ட 219 பேர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

18வயது தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட 732 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன் இதில் 203 ஆண்களும், 429 பெண்களும் அடங்குகின்றனர்.

50 வயதுக்கு மேற்பட்டோரில் 72 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் அதில் 35 ஆண்களும், 37 பெண்களும் அடங்குவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களுடன் அன்றாட நிகழ்வுகள் மற்றும் எதிர் கொண்ட பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளல், சமாளிக்க முடியாத பிரச்சினைகள் எதிர் கொள்ளும் போது பொருத்தமான உளவளத்துணையாளரின் அலோசனையைப் பெற்றுக் கொள்ளல் தேவைக் கேற்ப துறைசார் தேர்ச்சியாளர்களிடம் அலோசனைகளை பெற்றுக் கொள்ளல், சக பாடிகள் மற்றும் நண்பர்களுன் உரையாடுதல், சமய சடங்குகளில் கருத்துடன் பங்குபற்றல், போதியளவு ஓய்வெடுத்தல் உடலை நன்கு பராமரித்தல், தேவைக் கேற்ப மருத்துவ ஆலேசனையை பெறுதல் போன்ற பராமரிப்புக்கள் தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளாகுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY