காத்தான்குடியில்வேட்பாளர்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு

0
472

(விசேட நிருபர்)

காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை(10.10.2017) மாலை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அணி சார்ந்து போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை தொவு செய்யும் வாக்கெடுப்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

10 வட்டாரங்களை கொண்ட காத்தான்குடி நகர சபை தேர்தலில் பத்து வட்டாரங்களில் இருந்தும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இந்த வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்து பொது மக்கள் மற்றும் அந்த பிரசேத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அவர்களுக்கான தெரிவு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு இந்த வேட்பாளர் தெரிவு வாக்கெடுப்பு இடம் பெறுகின்றது.

இதன் பிரகாரம் காத்தான்குடி முதலாம் வட்டாரத்திற்கான வேட்டபாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் (10.10.2017) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட அவர் அணி சாந்த முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் வட்டார ரீதியாக பொருத்தமான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அந்த வட்டாரத்திலிருக்கின்ற பொது மக்களின் அபிப்பிராயத்தினை பெற்றுக் கொள்வதற்காக இந்த வேட்பாளர் தெரிவு வாக்கெடுப்பு நடாத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்ந்து பத்து நாட்களுக்கு இடம் பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY