காத்தான்குடியில் பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடாத்துனரை தாக்கிய நபர் கைது

0
290

(விசேட நிருபர்)

பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடாத்துனரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற இலங்கை போக்கு வரத்து சபையின் பஸ் வண்டி சாரதி மற்றும் நடாத்துனர் மீது நடாத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடாத்துனரை தாக்கிய சந்தேக நபர் மற்றும் அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிசார் செவ்வாய்க்கிழமை(10.10.2017) மாலை கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த முச்சக்கர வண்டியையும் காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பிரதான சந்தேக நபர் ஏறாவூரைச் சேர்ந்தவர் எனவும் இவர் தனியார் பஸ் வண்டி சாரதி எனவும் தெரிய வருகின்றது.

ஏறாவூரைச் சேர்ந்த இந்த சந்தேக காத்தான்குடிக்கு சென்று அங்கு முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு எடுத்து அதி;ல் சென்றே குறித்த பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடாத்துனரை தாக்கியுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி திங்கட்கிழமை காத்தான்குடி நோக்கிச் சென்று காத்தான்குடியில் பிரயாணிகளை இறக்கி விட்டு காத்தான்குடி டிப்போவுக்கு காத்தான்குடி கடற்கரை வீதி வழியாக சென்று கொண்டிருந்த போது காத்தான்குடி கடற்கரை வீதியில் குறித்த பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடாத்துனர் ஆகிய இருவர் மீது (9.10.2017) திங்கட்கிழமை இரவு 11மணியளவில் இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் இருவரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY