மாடர்ன் மம்மீஸ்

0
218

(Mohamed Nizous)

சங்கர் படம் பார்த்துக்கொண்டே
அங்கர் பால் கொடுக்கின்றார்
தாய்ப்பால் குடிக்கின்ற
வாய்ப்பை மறுக்கின்றார்

முக்கால் வாசிப் படம் போக
கக்கா சொல்லும் பிள்ளையிடம்
பம்பஸில் போ என்பார்
படம் முடிந்து சுத்தம் செய்வார்

அஜித்தின் பட கிளைமாக்ஸில்
பசித்து பிள்ளை அழுதாலும்
கொஞ்சம் இரு வாரன் என்பார்
பிஞ்சு பசி கூடி அழும்

பேஷ்புக் பார்க்கையிலே
பேச வரும் சின்னச் செல்லம்
ம் ம் ம் என்ற பதில் தவிர
மம்மி பதில் சொல்ல மாட்டா

துண்டு துண்டு இங்லீஸை
கண்டு பிடிச்சு கதை கேட்பா
மண்டு இங்லீஸ் கதை எண்டு
கண்ட பிடி திட்டி வைப்பா

மடியில உட்கார்ந்தால்
டடியிடம் இரு என்பா
அயன் பண்ணின் அபாயாவை
அவன் சுருக்கிப் போட்டுடுவானாம்

ஒழுக்கம் டீசண்ட் என்ற பெயரில்
பழக்கி விடுவா வேற கல்ச்சர்
முழுக்க முழுக்க பாஸ் புட்டில்
கொழுக்க வைப்பா மொழு மொழுண்னு

கொஞ்ச வருசம் போன பின்னால்
பிஞ்சு வளர்ந்து பெரிசாகும்
மம்மி என்ற அந்த உறவு
டம்மி பீசாய் மாறிப் போகும்

அப்புறம் ஐப்ரோ அழிந்து போக
அழுது வாடி நிற்பதிலும்
குப்புற விழும் வயசிலேயே
கொஞ்சிக் குலாவி வளர்த்தல் அறிவு

LEAVE A REPLY