5 தொடக்கம் 50 வரை

0
162

(Mohamed Nizous)

அஞ்சு நிமிஷம் தவறாக
பஞ்சு மெத்தை தந்த சுகம்
நஞ்சாகி பிற்காலத்தில்
நெஞ்சை வாட்டி வதைத்துப் போடும்

பத்து ரூபா குறைவென்று
சுத்தமில்லா உணவு உண்ணல்
சத்தமின்றி நோய் வளர்த்து
மொத்தமான செலவு தரும்

பதினைந்து வயதுக்குள்
பக்குவமாய் வளரா பிள்ளை
அதன் பின் நெறிப் படுதல்
ஐபோனில் டவுண்லோட் போல

இருபதாண்டு வளர்த்த தாயை
எடுத்தெறிந்து ஓடுபவள்
ஒருபோதும் வாழ்க்கையிலே
உருப்படியாய் வாழமாட்டாள்

இருபத்தையாயிரம் சதுர மைல்கள்
இலங்கை முழு நாட்டினையும்
ஒருவருக்கே கொடுத்தாலும்
ஒரு பேர்ச் குறையுதென்பார்

முப்பதாம் நாள் டேட்டா மிஞ்சி
முழு நாள் நெட் பார்த்தாலும்
அப்புறமும் அலுக்காது
அதனால்தான் நெட் e போதை

முப்பத்தைந்து வயது போயும்
முடிக்க முடியா கன்னியர்கள்
தப்பு ஏதும் செய்யாமலே
தண்டிக்கப் படுகிறார்கள்

நாற்பது திருடர்களை
நம்பினாலும் இப்ப உள்ள
யாப்பு திருத்தும் கூட்டத்தை
யாரும் நம்ப முடியாது

நாற்பத்தைந்தாம் அதிபராக
நம்ப ட்ரம்பு வந்தது போல்
ஏற்பாட்டில் எழுதி இருந்தால்
யாருக்கும் வாய்ப்பு வரும்

ஐம்பது வருடத்துக்கு முன்
ஆங்கிலேயன் போன பின்னால்
செய்தது இங்கு ஒன்று மில்லை
சிங்கக் கொடி மாறியது தவிர

LEAVE A REPLY