ஸ்கொலர்சிப் பெரியவர்களுக்கு…!

0
347

grade-v-exam schol result(Mohamed Nizous)

சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
சிலர் சொல்லப்போற வார்த்தையை நீயும்
தூக்கி வீசடா-நீயும்
தூக்கி வீசடா

ஸ்கொலர்சிப் பரீட்சையில் நீயும்
பெய்லாகிப் போனாயென்று
அவமானப் பட்டுப் போக
சொல்லி வைப்பாங்க-உன்
முயற்சியை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க.
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளில்
வேடிக்கையாகக் கூட
மிரண்டு விடாதே-நீ
முயற்சியை விட்டு விட்டு
சுருண்டு விடாதே-நீ
சுருண்டு விடாதே!-சின்னப்

பக்கத்துப் பிள்ளையைக் காட்டி
வெட்கமில்லையா என்று கேட்டு
மக்கு நீ என்று சொல்லி
ஏசி வைபாங்க – உன்
மனதை உடைத்து துண்டாய்
வீசி வைப்பாங்க.
சிந்திக்காத அடுத்தவரின்
நிந்திக்கின்ற வார்த்தைகளில்
நம்பிக்கையை இழந்து வாழ்வை
இழந்து விடாதே-நீ
நாளைய முயற்சிகளில்
தளர்ந்து விடாதே.-நீ
தளர்ந்து விடாதே

உனக்கெதுக்குப் படிப்பு என்று
உன் பிஞ்சு மனம் நோக
தனக்குள் உள்ள ஆத்திரத்தில்
உளறி வைப்பாங்க- உன்
உள் மனதை கத்தியாலே
கிளறி வைப்பாங்க.
பாஸ் பண்ணா பிள்ளைகள்தான்
படித்துப் பின் வெற்றி பெற்று
பெரிய பெரிய பதவிகள்
இருக்கிராரடா-அதைப்
பெரியவர்கள் உணர்ந்து கொள்ள
மறுக்கிறாரடா- உன்னை
நெருக்கிறாரடா

LEAVE A REPLY