விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு

0
210

விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்கு ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், எவ்வித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை வேனில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்குவைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY