27 வருடங்களின் பின் மீள்குடியேற்ற கிராமத்தின் முதலாவது தொழுகை

0
196

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான அல் – மஜ்மா கிராமத்தின் அல் – மஜ்மா பள்ளிவாயலின் முதலாது ஜூம்ஆ தொழுகை நேற்று (11) இடம் பெற்றது.

ஜூம்ஆ பிரசங்கத்தினையும் தொழுகையினையும் மௌலவி ரீ.எம்.அப்துல் மஜீட் (ஸர்கி) நடாத்தி வைத்ததுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பகல் போசனமும் வழங்கப்பட்டது.

அல் – மஜ்மா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ் நிலை காரணமாக 1990ம் ஆண்டு அப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் மீள் குடியேறி முந்னூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

1 2

LEAVE A REPLY