ஈரானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

0
141

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் நேற்று புயல் தாக்கியதையடுத்து கனமழை பெய்தது. இதன் காரணமாக 5 மாகாணங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சில கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக, மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் செம்பிறை இயக்கம் தெரிவித்துள்ளது.

கோல்ஸ்டன் மாகாணத்தில் ஒரு கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 3 பேரில் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 2 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளளனர்.

LEAVE A REPLY