06 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவன் கைது

0
278

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குணவர்தன புர ப‌குதியில் 06 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவனொருவனை இன்று (12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் அதே இடத்தைச்சேர்ந்தவர் எனவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 06 வயது சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY