கிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு

0
134

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை மாவட்ட வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியரசங்குளத்தில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பகுதியில் குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போன 22 வயதையுடைய நபரே மாடு மேய்க்கச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டமையும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY