பிரபல வைத்தியசாலையில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக 30 குழந்தைகள் உயிரிழப்பு

0
193

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே ஒக்சிசன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மிகப் பிரபலமான குறித்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஒக்சிசனுக்கான கட்டணத் தொகை வழங்கப்படாததால் விநியோகம் நிறுத்தப்பட்டதனால் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY