இரண்டு ரெயில்கள் நெருக்கு நேர் மோதிய விபத்தில் 29 பேர் பலி

0
193

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. ஒரு ரெயில் தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்துள்ளது. மற்றொரு ரெயில் கோர்சித் பகுதியில் உள்ள போர்ட் செய்ட்டில் இருந்து வந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 29 பேர் பலியாகினர். மேலும் 88 பேர் காயமடைந்தனர்.

‘மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்’ என எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY