(Photos) அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் திறப்பு!

0
398

(சப்னி அஹமட், அகமட் எஸ். முகைடீன்)

பொத்துவிலில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு இன்று (11) ஜும்மா தொழுகையுடன் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன், விஜித விஜயமுனி சொய்ஸா, இராஜாங்க அமைச்சர் பெளசி, பிரதியமைச்சர்களான பைஷால் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், அமீர் அலி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் உள்ளிட்டவர்களுடன் பல அரசியல் பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும், முக்கியஸ்தர்களும் அதிகமான பொதுமக்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் எகலியகொடயை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மாணிக்க கல் வியாபாரியான மர்ஹும் எம்.ஆர்.எம். சதகதுல்லாஹ் ஹாஜியாரின் நிதி ஒதுக்கீட்டில் இப்பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவரின் மறைவின் பின்னர் அன்னாரின் பிள்ளைகளினால் நிர்மாணப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

02 03 07 13 14

LEAVE A REPLY