பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு

0
142

பிலிப்பைன்ஸ்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், “பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தென்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் பூமிக் கடியில் 173 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY