ரவி கருணாநாயக்க குற்றவாளி அல்ல: ஹர்ஷ டி சில்வா

0
176

முன்னாள் வௌிவிவகார அமைச்சர ரவி கருணாநாயக்க சட்டத்தின் முன் குற்றவாளி அல்ல என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா புதிய சம்பிரதாயத்திற்கான முதற்படி என்றும் அது அடுத்தகட்ட விசாரணைகளுக்கு சிறந்த தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் காலத்திலும் இது போன்ற பிரச்சினைகள் இருந்ததுடன், சேமலாப நிதியம் தொடர்பிலும் பாரிய பிரச்சினைகள் இருந்தது.

இவை தொடர்பில் வாசுதேவ நாணயக்காரவினால் முறைப்பாடு செய்யப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட போதிலும் இவற்றுக்கு எதிராக அப்போதைய ஆட்சிக்காலத்தில் சரியான தீர்வு வழங்கப்படவில்லை என்று ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

அது மாத்திரமன்றி தாஜுதினின் உயிரிழப்பு கொலை என்று உறுதியாகிய போதிலும், அதனை விபத்தினால் நிகழ்ந்த மரணமாக ஒப்புவிக்க கடந்த அரசாங்கம் முயற்சித்ததாகவும், பிரதேச சபை தலைவர் ஒருவர் 100 பெண்களை துஷ்பிரயோகம் செய்து குற்றவாளியாகிய போதும், அதுபோன்றவர்கள் இராஜினாமா செய்யவதையோ குற்றத்தை ஒப்புக் கொள்வதையோ காண முடியவில்லை என்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

-AD-

LEAVE A REPLY