உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்படாது – ஜே.வி.பி.

0
145

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்படாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை எந்தவொரு வழியிலும் பாராளுமன்றில் நிறைவேற்ற இடமளிக்கப்படாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY