தொடரை கைப்பற்றியது இந்தியா

0
377

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களில் இந்தியா அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , தனது முதல் இன்னிங்சிற்காக 9 விக்கட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்நிலையில் , பலோவன் முறையில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நான்காவது நாளான இன்று சகல விக்கட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதன்படி , இந்தியா அணி இரண்டாது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Hirunews)

LEAVE A REPLY