ஹட்டனில் இந்திய அணியின் டீசேட்டை அணிந்த நிலையில், ஒரு பிள்ளையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

0
743

hirunews_Deathஹட்டன் காவற்துறைக்கு உட்பட்ட ரொத்தஸ் தோட்டத்தில் இன்று (19) நபரொருவர் வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அந்த தோட்டத்தில் வசித்து வந்த வசந்தன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வீட்டின் பின்புறத்தில் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூணியை பயன்படுத்தி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.

இந்த மரணம் தொடர்பில் அவசர மரண பரிசோதனை இடம்பெற்றுள்ள நிலையில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா மருத்துவமனைக்கு அனுப்புமாறு மரண பரிசோதகர், ஹட்டன் காவற்துறையிடம் கோரியுள்ளார்.

(Hiru News)

LEAVE A REPLY