பாணந்­து­றை தாக்­குதல்கள்: பொது­பல சேனாவின் தேரர் பொலிஸ் கான்ஸ்­டபிள் உள்­ளிட்ட நால்வர் கைது

0
217

கெப் வண்டி, வாள், ஹொக்கி மட்டை, பெற்றோல் குண்டு தயா­ரிக்கும் உப­க­ர­ணங்­களும் மீட்பு

பாணந்­துறை நக­ரிலும் எலு­வில பகு­தி­யிலும் இரு பள்­ளி­வா­சல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­திய கும்­பலை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவின் கீழ் செயற்­பட்ட சிறப்புப் பொலிஸ் குழுவே இவர்­களைக் கைது செய்­த­தா­கவும் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பாணந்­துறை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தா­னி­யு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொடி தெரி­வித்தார்.

கைதான நால்­வரில் பொது பல சேனா அமைப்­புடன் இணைந்து செயற்­பட்ட பெளத்த தேரர் ஒரு­வரும், கொழும்பு – வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரும் அடங்­கு­வ­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொடி சுட்­டிக்­காட்­டினார்.

நேற்­றைய தினம் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவும், பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொ­டியும் இணைந்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் வைத்து இது குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினர். இதன் போது பொலிஸ் பேச்­சாளர் கூறி­ய­தா­வது,

‘ இனங்கள், மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நாம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அதன்­படி பதி­வான வெறுப்­பூட்டும் அத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்பில் தனித்­த­னி­யான பொலிஸ் குழுக்­களைக் கொண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்தோம்.

இந் நிலையில் தற்­போது அந்த விசா­ர­ணை­களின் பலன் தெரிய ஆரம்­பித்­துள்­ளது.

நுகே­கொட பகு­தியில் முஸ்லிம் கடை­க­ளுக்கு தீ வைத்­த­வரை நுகே­கொட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் கீழ் செயற்­பட்ட குழு கைது செய்­ததைப் போன்று பாணந்­துறை பகு­தியில் பதி­வான சம்­பவம் தொடர்பில் நால்வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­சாவின் கீழ் செயற்­பட்ட சிறப்பு பொலிஸ் குழு­வினர் அவர்­களைக் கைது செய்­தனர்.

மே மாதம் 17 ஆம் திகதி பாணந்­துறை பகு­தியில் எலு­வில முஸ்லிம் பள்­ளி­வாசல் மீதும் அதற்கு முன்­னைய தினம் பாணந்­துறை நகரில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யமை, எலு­வில பகு­தியில் இரு முஸ்லிம் கடைகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்­பி­லேயே நான்கு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் ஒரு தேரரும் ஒரு பொலிஸ் கான்ஸ்­ட­பிளும் இரு சிவி­லி­யன்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அவர்கள் இந்த குற்­றங்­களைப் புரி­வ­தற்­காக பயன்­ப­டுத்­திய கெப் வாகனம் ஒன்று, இரு வாள்கள், ஒரு ஹொக்கி மட்டை மற்றும் பெற்றோல் குண்டு தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­பட்ட உப­க­ர­ணங்கள் ஆகி­ய­னவும் மீட்­கப்­பட்டு நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் போதே அவர்­களை 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இதனை விட கடந்த மே 20 ஆம் திகதி குரு­நாகல், மல்­ல­வ­பிட்டி பகு­தியில் ஜும் ஆ பள்ளி வாசல் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் இரு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் பிர­தான சந்­தேக நப­ருக்கு சொந்­த­மான கடை அறையில் இருந்து இன­வாத போஸ்­டர்கள் பல மீட்­கப்­பட்­டன.

சந்­தேக நபர்­களில் பலர் பொது­பல சேனாவின் செயற்­பாட்டு உறுப்­பி­னர்­க­ளாவர். உண்­மையில் பாணந்­துறை சம்­ப­வத்தில் கைதான பௌத்த தேரர் பொது­பல சேனாவின் செயற்­பா­டு­க­ளுடன் மிக நெருக்­க­மாகச் செயற்­பட்­டவர். பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்­று­பவர். அவர் கடந்த இரு வரு­டங்­க­ளாக பொலிஸ் சேவையில் இருந்து விலகி இருந்­துள்­ள­துடன் அண்­மை­யி­லேயே மீள இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தவர்.

எனவே இன, மத­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுவோர் தரா­தரம் பார்க்­காது சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டுவர் என்­பதை கூறு­கின்றோம் என்றார்.

பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட எலு­வில பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரு வர்த்­தக நிலை­யங்கள் மீதும் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும் கடந்த மே 17 ஆம் திகதி பெற்றோல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் அத­னுடன் உள்ள மற்­றொரு வர்த்­தக நிலையம் ஆகி­ய­னவே தாக்­கப்­பட்ட வர்த்­தக நிலை­யங்­க­ளாகும். ஹொக்கி மட்­டை­களால் வர்த்­தக நிலை­யங்­களின் கண்­ணாடி மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு அதன் பின்னர் உடைந்த கண்­ணா­டி­க­ளுக்கு மத்­தியில் பெற்றோல் குண்­டுகள் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குள் வீசப்­பட்­டுள்­ளன.

சுமார் நால்வர் கொன்ட குழு­வொன்றே இந்த தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளமை ஆரம்­பிக்கப்பட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­துடன் ஒரு வர்த்­தக நிலையம் மீது தாக்­குதல் நடத்தும் காட்சி அருகில் உள்ள கடை ஒன்றின் சி.சி.ரி.வி. கம­ராவில் பதி­வா­கி­யி­ருந்­தன.

அதே போல் மே 16 ஆம் திகதி பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளி­டையே அமைக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யது.

பள்ளிவாச­லுக்கு பின்­பு­ற­மாக உள்ள யன்னல் வழி­யாக மேல்­மா­டியின் கண்­ணா­டியை உடைத்து பெற்றோல் குண்டு வீசப்­பட்டே இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது பள்­ளி­வா­சலின் மேல் மாடிக்குச் செல்லும் படிகள் கடு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

குறித்த முஸ்லிம் பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வீடுகள் எவையும் இல்லை. எனினும் முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்­கு­ரிய கடைகள் 50ற்கும் மேல் உள்­ள­தாக அறி­யப்­படும் நிலையில், வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வருவோர் தொழு­கை­களை நிறை­வேற்றும் முக­மா­கவே இந்த பள்­ளி­வாசல் கடை­க­ளி­டையே அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பள்­ளி­வா­ச­லுக்கு பின் பக்­க­மாக பாணந்­துறை குப்­பை­மேடு அமைந்­துள்ள நிலையில் அப்­ப­கு­தியை நோக்கி பள்­ளி­வா­சலில் ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னலே உடைக்கப்பட்டு மேல்மாடிக்கு பெற்றோல் நிரப்பப்பட்ட போத்தல்கள் ஊடாக தயாரிக்கப்படும் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.

இந் நிலையிலேயே இது குறித்த விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டன. குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நிசாந்த சொய்ஸாவின் மேற்பார்வையில் அதன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலகவின் ஆலோசனைக்கு அமைய பொறுப்பதிகாரி நெவில் சில்வா தலைமையிலான குழுவினர் இது தொடர்பிலான விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Vidivelli)

LEAVE A REPLY