முபீனின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

0
209

(ஆதிப் அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாலளருமான யு.எல்.எம்.என். முபீனின் ஏற்பாட்டில் காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை, சிகரம், ஒல்லிக்குளம் மற்றும் கர்பலா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பிரமுகர்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று (18) மட்/மம/பாலமுனை அலிகார் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ஸெய்யித் அலி ஷாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் போராளிகள் என அதிகளவிலான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

1

LEAVE A REPLY