(Just in) சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்

0
384

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா சேஸிங்கின் முதல் ஓவரிலேயே இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை நொறுக்கினார். முகமது ஆமிர் வீசிய 3-வது பந்திலேயே ரோஹித் வீழ்ந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கோலி 5 ரன்கள், அடுத்த சில ஓவர்களில் ஷிகர் தவண் 21 ரன்கள் என இருவரும் ஆமிர் பந்துவீச்சுக்கே பலியாக 9 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர் பவுண்டரிகளுடன் யுவராஜ் சிங் சிறிது நம்பிக்கை அளித்தாலும் ஷதப் கான் பந்துவீச்சில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் தோனியும் வெறும் 4 ரன்களுக்கு வெளியேறினார். கேதர் ஜாதவ் வந்த வேகத்தில் 9 ரன்கள் மட்டும் அடித்துவிட்டு ஆட்டமிழந்தார்.

இந்த கட்டத்தில், எதிர் முனையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியா ஆட ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பந்துவிச்சை நாலாபுறமும் அவர் சிதறடிக்க, களத்தில் ரவீந்திர ஜடேஜா அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸ்ர்களுடன் பாண்டியா அரை சதத்தை கடக்க, ஒருவேளை இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். பாண்டியாவின் ஆக்ரோஷ ஆட்டம் சிக்ஸர், பவுண்டரிகள் என தொடர்ந்தது.

துரதிர்ஷ்டவசமாக 27-வது ஓவரில் பாண்டியா 76 ரன்களுக்கு (6 சிக்ஸர், 4 பவுண்டரி) ரன் அவுட் ஆனார். ஜடேஜா பாண்டியாவை கவனிக்காமல், பந்தையே பார்த்து சரியாக கணிக்காமல் ஓட முற்பட்டத்தால் வீழ்ந்த விக்கெட் இது. இந்தியா 152/7. தேவை 23.3 ஓவர்களில் 187 ரன்கள்.

இதன் பிறகு இந்தியாவின் ஆட்டம் வெகுநேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரிலேயே ஜடேஜா 15 ரன்களுக்கு ஜுனைத் கானின் வேகத்தில் விழ, அதற்கடுத்த ஓவரில் அஸ்வின் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் பந்துவீச்சை சந்திக்க வாய்ப்பின்றி பும்ரா ஒரு ஓவர் தாக்குப்பிடித்தாலும் அதற்கடுத்த ஓவரில் மாட்டிக்கொண்டார். ஹசன் அலி வீசிய 30-வது ஓவரின் மூன்றாவது பந்தில் பும்ரா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

LEAVE A REPLY