இந்தியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணையித்தது பாகிஸ்தான்

0
465

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்தியா கடுமையாக போராடி வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் பேட்டிங் துவக்கியது. துவக்கியது முதல் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய பாகிஸ்தானுக்கு பகர் ஜமான் சதம் பெரும் உந்துதலாக இருந்தது.

2வது முறையாக மோதல்

ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை (50 ஓவர்), ‘டுவென்டி-20’ உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற மிகப் பெரிய தொடர்களின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2வது முறையாக மோதுகின்றன.

இதற்கு முன், 2007ல் தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த ‘டுவென்டி-20’ உலக கோப்பை பைனலில் இவ்விரு அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. * சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மோதுவது இதுவே முதன்முறை.

பகர் ஜமான் அபார ஆட்டம்

அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் பகர் ஜமான் (114) சதமடித்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் சதமடித்த 6வது வீரரானார்.

இதற்கு முன், வெஸ்ட் இண்டீசின் வாலேஸ் (103, எதிர்- தென் ஆப்ரிக்கா, 1998), இந்தியாவின் கங்குலி (117, எதிர்-நியூசிலாந்து, 2000), நியூசிலாந்தின் கெய்ன்ஸ் (102*, எதிர்-இந்தியா, 2000), இங்கிலாந்தின் டிரஸ்கோதிக் (104, எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 2004), ஆஸ்திரேலியாவின் வாட்சன் (105*, எதிர்-நியூசிலாந்து, 2009) ஆகியோர் பைனலில் சதமடித்தனர். *தவிர, சாம்பியன்ஸ் டிராபியில் சதமடித்த 3வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார் பகர் ஜமான். இதற்கு முன், சயீத் அன்வர் (105*, எதிர்-இலங்கை, 2000 மற்றும் 104, எதிர்-நியூசிலாந்து, 2000), சோயப் மாலிக் (128, எதிர்-இந்தியா, 2009) சதமடித்தனர்.* தவிர இது, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பதிவான 50வது சதம்.

(Dinamalar)

LEAVE A REPLY