சட்ட விரோத பொருட்களும் சந்தேக நபர்களும் கைது.

0
113

(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் ஏற்றிய உழவு இயந்திரம், சட்டவிரோத ஆடு மற்றும் மாடு என்பவற்றை ஏற்றி வந்த வாகனங்களும், சந்தேக நபர்களும் வௌவேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார்.

தொப்பிகல பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்கள் மூன்றும், கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பதின்மூன்று ஆடுகளும், பொண்டுகல்சேனை பகுதியில் இருந்து காவத்தமுனை பிரதேசத்திற்கு அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று மாடுகளும் அவைகளை ஏற்ற பயன்படுத்திய வாகனங்களும், சந்தேக நபர்கள் ஆறு பேரும் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார்.

S1510117

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொப்பிகலை, புலிபாய்ந்தகல், பொண்டுகல்சேனை, பொத்தானை மற்றும் அக்குறாணை போன்ற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றல், ஆடு மற்றும் மாடுகளை திருடுதல், சட்டவிரோத மரங்களை கடத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையில் சென்ற குழுவினரே மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

S1510112

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விசேட குழுவை நியமித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் இன்னும் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

S1510116

LEAVE A REPLY