மட்டக்களப்பில் சர்வதேச யோகா தின நிகழ்வு

0
117

(வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் நடாத்தும் சர்வதேச யோகா தின நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணிக்கு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசனம் செல்லையா துரையப்பா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், ச.வியாளேந்திரன், கே.கோடீஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

02 (2)

மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், அதன் உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.நிசாம் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சர்வதேச யோகா தின நிகழ்வில் அனைத்து இளைஞர் யுவதிகளையும் கலந்து கொள்ளுமாறு யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசனம் செ.துரையப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY