இவர்களும் உங்கள் சகோதர்கள் தான் நினைவு கூறுங்கள்

0
235

ஆடம்பர உடைகளை உங்கள் மேனிகளை ருசிக்கும் முன் உங்கள் சகோதர சகோதரிகளை நினைவு கூறுங்கள்

உடலை அழங்கரிக்க ஆயிரம் கடை ஏரி இறங்கி ஆயிரக்கணக்கு
பொருமதியான ஆடைகளும் உடைகளுக்குப் பொருத்தமான நிறங்களில் நகைகளும் .
உச்சி முதல் உளளங்கால் வரை அணிய இருப்பவர்களே உங்கள் சகோதர சகோதரிகளை நினைவு கூறுங்கள்

வறியவர் நிலை செல்வந்தன் உணர அல்லாஹ்வால் அருளப்பட்ட புனிதமிகு ரமழான் மாதம்

செல்வந்தன் உணராமலே அவனது வளங்கள் காபீர்களால் தீக்கிரையாக்கப் படுகிறது ஆடையெனும் வடிவில்

பசியென்பதே உணரவே நோன்பு விதிக்கப்பட்டது உணர்வு இழந்து விட்டான் செல்வந்தன்
ஏழை நோன்பை எப்போது திரப்போம் எப்போது ஒரு துண்டு பேரித்தம் பழம் கிடைக்குமென்று தவிக்கின்றான் துடிக்கின்றான் ஏழை

யா உம்மத்தே! முஹம்மது (ஸல்) உம்மத்துகளின் நிலைமைகளை தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களின் உணவு தட்டில் கைவைக்கும் பொழுது உங்களின் சகோதர்களையும் நினைவு கூறுங்கள்

மாபெரும் இப்தார் மிகவும் விமர்சையாக அங்கும் இங்கும் நடைபெருகிறது யாருக்கு இந்த இப்தார் செல்வந்தனுக்கா ? ஏழைக்கா?

உண்ண உணவு இருப்பவனுக்கு பிரியாணி கொடுப்பதை விட பசியுடன் இருப்பவனுக்கு கொஞ்சம் கஞ்ஞோ கூலோ கொடுப்பது மேல் என்று இந்த சமுகம் புரிந்து கொள்ள மறுப்பது ஏனோ

இந்த பெருநாள் தொழுகை தொழ புதிய ஆடை இல்லையே என்று ஏங்கும் கண்களை பாருங்கள் உங்கள் சகோதர சகோதரிகளை நினைவு கூறுங்கள்

நாவு ருசிக்க உணவு இல்லா விட்டாலும் ஒரு வேலை பசியார உணவு கிடைக்குமா என்று தவிக்கும் உங்கள் சகோதர்களை நினைவு கூறுங்கள்

(மொஹமட் தமீம்) வரிப்பத்தான் சேனை

LEAVE A REPLY