தெருக் குரல் – உடுப்பெடுத்தல் அதிகாரம்

0
372

(Mohamed Nizous)

நோம்புல பசியால நொந்து போவதிலும்
ஆம்புள அதிகம் நோவான் அபாயாக் கடைத் தேடலிலே.

சாரிக்கு மெட்சாக சட்டை தேடி அலைவதிலும்
பூரிக் கட்டையால் படுவது பொதுவாகச் சிறந்ததாம்

இல்வாழ்வில் இருக்கும் எல்லாக் கொடுமையிலும்
சல்வார்க் கடை வெயிட்டிங் சகிக்க முடியாதாம்.

உசைன் போல்ட் ஓட்டத்திலும் ஓவரான வேகமாம்
டிசைன் மாறும் வேகம் அபாயாவின்.

எடுத்திருக்கும் உடுப்பு எதுவுமே சரிவராதாம்
அடுத்த ஊட்டு பொம்புள அங்கீகரிக்கும் வரைக்கும்

கலருக்கும் டிசைன் தேடி
டிசைனுக்கு கலர் தேடி
சிலருக்கும் பிடிக்குமாம் பைத்தியம்

காகம் பல்லி கக்கா போன உடுப்பைக் காட்டி
பாகு பலி டிசைன் என்றால்
பதறிக் கொண்டு வாங்குவார்

நூறு சாரன் வாங்கி வேறு வேறா உடுத்தாலும்
யாரும் சொல்ல மாட்டார் இது நல்ல டிசைன் என்று

LEAVE A REPLY