கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்தின் கட்டார் அமைச்சரவை பிரகடனம்

0
696

கட்டார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் அப்துல்லாஹ் பின் நாஸர் பின் கலீபா அல் தானீயின் தலைமையில் எமிரி திவானில் கடந்த 2017 ஜுன் 05 அதி விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தின் பின் துணை பிரதமரும், அமைச்சரவை விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சருமான அஹ்மத் பின் அப்துல்லாஹ் ஸயித் ஆல் மஹ்மூத் கீழ்வரும் பிரகடனங்களை மேற்கொண்டார்:

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதற்கும் எல்லைகளை மூடிவிடுவதற்கும் எடுத்த முடிவை அமைச்சரவை மீள்பரிசீலனை செய்தது.

அனாவசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி தீர்மானங்கள் தொடர்பாக தமது அதிர்ச்சியை அமைச்சரவை வெளிப்படுத்தும் அதே வேளை, இந்த தீர்மானம் எந்த நியாயமும் அற்றது எனவும், புனையப்பட்ட போலிக் குற்றச் சாட்டுக்களை அடிப்படையாக வைத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது எனவும் அமைச்சரவை சுட்டிக் காட்டியது.

இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளுவதற்கும், எல்லைகளை மூடிவிடவும் மேற்கொண்ட மேற்படி தீர்மானங்களுக்கு வழிவகுத்த ஊடக பிரச்சாரத்தின் உள்நோக்கம், நாட்டு மக்களின் நலன்களை காப்பதற்கான கட்டாரின் தேசிய கொள்கைகளை கைவிடவும், இறையாண்மையை விட்டுக் கொடுக்கவும் கட்டார் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகும் என்ற விடயங்கள் ஆரம்பம் முதலே தெளிவாக தென்பட்டு வந்தன.

கட்டார் அரசு வளைகுடா பிராந்தியத்தின் அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு கவுன்சில் அமைப்பிற்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளதோடு அங்கத்துவ நாடுகள் இடையே உள்ள சகோதர பிணைப்பை மேலும் பலமூட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்டும் வந்துள்ளது. அதே போன்று இனியும் மேற்படி அமைப்புக்களின் கோட்பாடுகளுக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவன்சில் அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் மக்களின் நலனுடன் தொடர்பான அனைத்து கோட்பாடுகளுக்கும் கட்டார் தொடர்ந்தும் விசுவாசமாக இருக்கும்.

அத்துடன், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து அனைத்து விதமான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக தொடர்ந்தும் கட்டார் போராடும் என்ற தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தியது.

மேலும் கட்டாரின் பிரஜைகள் மற்றும் அங்கு தங்கியிருப்பவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை மாற்றங்களின்றி வழமை போன்று தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் நீண்ட நாட்களுக்கு முன்பே கட்டார் அரசு மேற்கொண்டு விட்டுள்ளதுடன், மேற்படி 3 நாடுகளின் முடிவின் விளைவாக கட்டாரில் வசிப்பவர்களின் வழமையான நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசு உறுதி அளிக்கின்றது. அத்துடன், கட்டாருடனான புவி எல்லைகளை மூடி விட்ட மேற்படி நாடுகளை தவிர்த்து, ஏனைய சகல நாடுகளுடனான இறக்குமதி மற்றும் போக்குவரத்திற்காக கட்டாரின் வான் மற்றும் தரை மார்க்கங்களின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் திறந்தே இருக்கும்.

உண்மை நிலை இதுவாக இருப்பதால், பொய்யான ஊடக பிரச்சாரங்களை பொருட்படுத்தாது அமைதியாக இருக்குமாறு அமைச்சரவை மக்களை கேட்டுக் கொள்கின்றதுடன், நிலைமையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்கச் செய்வதாகவும் அமைச்சரவை உறுதி அளிக்கின்றது.

மேலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மறறும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள மற்றும் அந்நாட்டு அரசுக்களால் வெளியேறும் படி கூறப்பட்டுள்ள கட்டார் பிரஜைகள் அந்தந்த நாடுகளின் தூதுவராலயங்ககளுக்கு சென்று நாட்டுக்கு பாதுகாப்பாக திரும்பி வருவதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறும் கட்டார் பிரஜைகளை அமைச்சரவை கேட்டுக்கொள்கின்றது.

கட்டார் தூதரகம்
கொழும்பு

Press Release . tamil.-1 Press Release . tamil.-2

LEAVE A REPLY