மட்டக்களப்பு மாவட்ட வேலையற்;ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சமய தலைவர் சமய வழிபாடு

0
222

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று(21) வெள்ளிக்கிழமையுடன் இரண்டு மாதங்களாகியும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் சமயதலைவர்களின் சமய வழிபாடுகள் இடம் பெற்றன.

DSC03122

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அர தொழில் கோரி காலவரையறையற்ற சத்தியாக்கிரக பேராட்டத்தினை கடந்த 21.2.2017 அன்று மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் ஆரம்பித்தனர்.

DSC03126

இன்று 21.4.2017 வெள்ளிக்கிழமையுடன் இவர்களின் இந்த சத்தியாக்கிரக போராட்டம் இரண்டு மாதங்களை கடந்துள்ளன.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப் பெறாத நிலையில் இவர்கள் தொடர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DSC03128

21.4.2017 வெள்ளிக்கிழமையுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைவதையொட்டி மட்டக்களப்பிலுள்ள சமய தலைவர்களின் சமய பிராத்தனைகள் இடம் பெற்றன.

DSC03131

இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சமய பிரமுகர்கள் இங்கு சமூகமளித்து இவர்களுக்கு ஆசி வழங்கியதுடன் சமய வழிபாடுகள் பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர்.

விரைவாக தொழில் கிடைக்கவும் இவர்களின் சத்தியாக்கிரக போராட்டம் வெற்றிபெறவும் இவர்கள் இதன் போது ஆசி தெரிவித்தனர்.

எமக்கான தீர்வு உரிய முறையில் அரசாங்கத்தின் எழுத்து மூலமான உத்தரவாதத்துடன் வரும் வரைக்கும் நாம் இவ்விடத்தை விட்டு செல்ல மாட்டோம் என சத்தியாக்கிரகம் இருந்து வரும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

DSC03116

LEAVE A REPLY