வாழ்வே மாயம்: Poem

0
263

பேஷ்புக் மா(ம)யம் – எங்கும்
பேஷ்புக் மா(ம)யம்.
தரை மீது காணும் யாவும்
தரவேற்றிப் போடும் கோலம்
லைக் நோயம்மா!
யார் மானம் யார் போக்கினும் -தான் போடும் போஸ்டில்
லைக் பெற்று பேர் வாங்கணும்.

பிறந்தாலும் போட்டோ போடுவார் இங்கே
இறந்தாலும் போட்டோ போடுவார்.
லைக்கப் போட்டால் லைக்கு விழும்
பொய்க்குக் கூட லைக்கு விழும்.
டைம் லைனில் நல்லவர்.
இன்பொக்ஸில் ஜொள்ளுவார்.
டைம் லைனில் நல்லவர்.
இன்பொக்ஸில் ஜொள்ளுவார்.
மெய்யென்று ஐடியை யார் சொன்னது?

சவத்தோடு ஷெல்பி எடுக்கிறார் இங்கே
விபத்தோடும் ஷெல்பி எடுக்கிறார்.
போடும் போஸ்ட்டோ ஒரு ஐடியில்
புகழ்வார் அவரே மறு ஐடியில்
மார்க்காலே வந்தது
மன நோயாய்ப் போனது.
மார்க்காலே வந்தது
மன நோயாய்ப் போனது.
இருந்தாலும் fbயில் இருக்கின்றார் நல்லவர்.

(நிஷவ்ஸ்)

LEAVE A REPLY