ஏறாவூர் அல்-ஜிப்ரியா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

0
162

எம்.ஜே.எம்.சஜீத்

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா இன்று (11) அகில இலங்கை ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது.

ஏறாவூர் மட்/ அல்-ஜிப்ரியா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம். மௌஜூத் தலைமையில் இன்று நடைபெற்ற வித்தியாரம்ப விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY