மனசாட்சியை குப்பை தொட்டியில் வீசி விட்டான் இந்த மானிடன்

0
313

அடுத்தவரால் கீழே தள்ளப்பட்டாலும் அடுத்தவரை கீழே தள்ளாமல் முன்னுக்கு வர நினைப்பதுதான் ஒரு நல்ல இதயத்தின் குனமாக இருக்கும்,………!

ஆனால் இங்கு எவன் எப்படி போன எனக்கு என்ன நான் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம் வேடிக்கை என்ன வென்றால் மன சாட்சியை குப்பை தொட்டியில் வீசி விட்டன்
இந்த மானிடன்

சுயநலம் பெருகி விட்டது தொற்று நோயாய் பலர் உள்ளங்களில்

முக மூடி அணிந்து நமக்கு முன்னால் நல்லவர்கள் போன்றும் நடித்து
முதுகில் குத்தி நம்மை வீழ்த்த நினைபவர்களே அதிகம்
யாரையும் அதிகமாக நம்பாதீர்கள்

உங்கள் வீழ்ச்சிக்கு காரணம் அவர்களாக கூட இருந்து விடலாம்

தன்நம்பிக்கை மீது நம்பிக்கை வை தோழனே வெற்றி உன் கைவசம் நிச்சயம்

வேசம் போட்டு பாசம் காட்டி விசம் தடவ நினைக்கும் நயவஞ்சகர்களே இந்த பூமியில் அதிகம்

சிலருக்கு இதயத்தை பிளந்து கொடுத்தாலும்

பழைய காகிதமாய் கசக்கி வீசி சென்று விடுகின்றார்கள்

அந்த இதயத்தில் இருப்பது அவர்கள்தான் என்று தெரிந்து கொள்ளாமல்

எழுந்து வீர நடை போடு நம்பிக்கை எனும் பசியை உன்னில் ஊற்றி இறைவன் உனக்கு துனையாக இருப்பான்

நீ பட்டம் பதவி பணம் சேர்த்து வெற்றி பெறுவதில்லை சந்தோசம்
விட்டு கொடுத்து பார் ஏழைகளின் கண்ணீர்களை துடைத்து பார் ஒரு ஆத்தவின் பசிக்கு உணவு கொடுத்து பார் அதில் அல்லவா இன்பம்

போறாமையிலும் பகையிலும் ஒரு போதும் இல்லையட இன்பம் உனக்காக வாழ்வதைவிட உன்னை சுற்றி உள்ளவர்ளுக்காய் வாழ்ந்து பார் நாளை நீ உலகின் பாட புத்தகமாய் இருப்பாய்

முஹமட் தமீம்

LEAVE A REPLY